திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வு க் கூட்டம்:
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, அனைத்து அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக, மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்ட பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கோவில் வளாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தொற்றுநோய் தடுப்பு பணிகள்; போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களுக்கும், புகார்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 044-27666746,044-27664177 என்ற எண்களுக்கும் மற்றும் வாட்ஸ்அப் எண்ணான 9444317862-க்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், மின்னஞ்சல் முகவரியான dmtahsildar.tlr@gmail.com , dmtahsildar.tlr@tn.gov.in -க்கும் தகவல் தெரிவிக்கலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளே வருபவர்களுக்கும், உள்ளிருந்து வெளியே செல்பவருக்கும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க அலுவலகத்தின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் மருத்துவ முகாம்கள்; அமைக்கப்பட்டு, சுகாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன்,மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.